பிரிட்டனில் குவியும் இந்திய மாணவர்கள்

லண்டன்: கடந்த மாதத்துடன் முடிந்த ஓராண்டில் பிரிட்டனுக்கு 5 லட்சம் இந்தியர்கள் பயணம் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள். கடந்த ஓராண்டில் லண்டனுக்கு பயணம் செய்த இந்தியர்கள், சீனர்கள் மட்டும் மொத்தத்தில் 49 சதவீதம் பேர். கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்தாண்டு ஜூன் வரை 5 லட்சத்து 3 ஆயிரம் இந்தியர்கள் லண்டனுக்கு பறக்க விசா பெற்றுள்ளனர். பிரிட்டன் தேசிய புள்ளியியல் துறை அதிகாரி இதுபற்றி கூறியதாவது: பொதுவாகவே சமீப காலமாக பிரிட்டனில் படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த 2011 ல் இருந்து மற்ற நாட்டு மாணவர்களை விட இந்திய மாணவர்கள் மிக அதிகம்.  கடந்தாண்டு 5  லட்சம் இந்தியர்கள் பயணம் செய்ததற்கு இன்னொரு காரணம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி. மிக அதிக அளவில் இந்திய ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

இதுபோல, திறமை வாய்ந்த பணிகளில் சேருவோரில் இந்தியர்கள் அதிகமாக உள்ளனர். மற்ற நாடுகளை விட, இந்த வகையிலும் பிரிட்டனில் தான் இந்தியர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வகையில், இந்தியர்களுக்கு மேற்கல்வி தொடரவும், பணியாற்றவும் உகந்த இடமாக பிரிட்டன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதிகாரி கூறினார்.


Tags : Indian,students,concentrating,Britain
× RELATED திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி...