உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்ந்து 3வது முறையாக: பைனலில் சிந்து.

பாசெல்:  உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து 3வது முறையாக தகுதி பெற்றார்.சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் அரை இறுதியில் சீன வீராங்கனை சென் யூ பெய்யுடன் (3வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து 21-7, 21-14 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 40 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. சென் யூவுடன் இதுவரை மோதிய 9 போட்டிகளில் சிந்து 6வது வெற்றியை வசப்படுத்தி உள்ளார்.உலக சாம்பியன்ஷிப்பில் ஏற்கனவே 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள சிந்து, நடப்பு தொடரில் தனது 5வது பதக்கத்தை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான் - நஸோமி ஓகுஹரா (ஜப்பான்) இடையே நடைபெறும் அரை இறுதியில் வெற்றி பெறும் வீராங்கனையை, சிந்து பைனலில் எதிர்கொள்வார்.

Tags : World Badminton,Championships, 3rd consecutive , Indus ,Biennale.
× RELATED பேட்மின்டன்: தமிழகம் முதல் வெற்றி