டிஎன்சிஏ இரங்கல்

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) சார்பில் அதன் கவுரவ இணை செயலாளர் ஆர்.ஐ.பழனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முன்னாள் தலைவரும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநருமான  என்.சீனிவாசன்  இரங்கல்  தெரிவித்துள்ளனர். விளையாட்டு காய சிகிச்சை மையம் விளையாட்டுகளின் போது ஏற்படும் காயம், பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள  குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில்  ‘விளையாட்டு காய  சிகிச்சை மையம்’  திறக்கப்பட்டுள்ளது.   எதிர்காலத்தில் காயங்கள் ஏற்படும் வாய்ப்புகளை கண்டறிய உடல்திறன் சோதனைகள் செய்வது, ஊட்டச்சத்து, உடல்திறன் மேம்பாடு ஆலோசனைகள் வழங்குவது ஆகியவை இந்த மையம் மூலம் மேற்கொள்ளப்படும். திறப்பு விழாவில் தமிழ் தலைவாஸ் கபடி கேப்டன் அஜய் தாகூர், பயிற்சியாளர் பாஸ்கரன் உள்ளிட்ட  வீரர்கள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

சென்னையின் எப்சியில் ருமேனிய வீரர் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 6வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னையின் எப்சி உட்பட பல்வேறு அணிகளில் வீரர்கள் சேர்ப்பதும், வெளியேற்றுவதும் நடக்கின்றன. இந்நிலையில், சென்னையின் எப்சி அணியில்  ருமேனியாவைச் சேர்ந்த கால்பந்து  வீரர் டிராகோஸ் ஃபிர்டுலெஸ்கு (30) சேர்க்கப்பட்டுள்ளார்.  இடதுபக்க நடுகள ஆட்டக்காரரான இவர் பல்கேரியாவின் முன்னணி கால்பந்து கிளப்பான எப்சி டுனாவ் கிளப்பில் இதுவரை விளையாடினர்.  பல்கேரியாவில் உள்ள இவர் விரைவில்  சென்னை வந்து அணியுடன் இணைவார் என்று சென்னையின் எப்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: