ஐஎஸ்எல் 6வது சீசன் அக். 20ல் தொடக்கம்

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 6வது சீசன்  கேரள மாநிலம் கொச்சியில் அக். 20ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில்  கேரளா பிளேஸ்டர்ஸ் - ஏடீ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.  போட்டிகள்  இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.சென்னையின் எப்சி தனது முதல் போட்டியில் எப்சி கோவா அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டி கோவாவில் நடைபெறும். சென்னையில் முதல் போட்டி அக். 27ம் தேதி நடைபெறும். அதில் சென்னையின் எப்சி - மும்பை சிட்டி எப்சி அணிகள் மோத உள்ளன.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அடுத்த ஆண்டு பிப். 23ம் தேதி வரை  மொத்தம் 90 லீக் போட்டிகள் நடைபெறும். அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

Tags : ISL,6th,Season Start, 20
× RELATED இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 2ம்...