×

ஆக்கிரமிப்பு அகற்றம்

பெரம்பூர்: வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் சேணியம்மன் கோயில் தெரு மற்றும் ஏ.இ கோயில் தெரு வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன. ஆனாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், தண்டையார்பேட்டை வஉசி நகர் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை நேற்று போலீசார் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Aggressive,Disposal
× RELATED நீர்நிலைகளை ஆக்கிமித்து...