விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடலுறுப்பு தானம்

மாதவரம்: மாதவரம் அருள் நகரை சேர்ந்தவர் அமுதா. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பதிவேடு அலுவலராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் வினோத்குமார் (26), கடந்த 15ம் தேதி மாதவரம் தனியார் கல்லூரி அருகே  பைக்கில் சென்றபோது, வேகத்தடை மீது பைக் வேகமாக மோதியதால் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று முன்தினம் மூளைச்சாவு ஏற்பட்டது.

இதுபற்றி அவரது தாய் அமுதாவிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அப்போது அவர், தனது மகனின் உடலுறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, வினோத்குமாரின் கல்லீரல், சிறுநீரகம், இதயம், கண்கள் மற்றும் தோல் ஆகியவற்றை பாதுகாப்பாக அகற்றினர். இவற்றை விரைவில் மாற்று அறுவை சிகிச்சை மூலம் உரிய நோயாளிகளுக்கு பொருத்த உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags : Plaintiff's,body, donated ,accident
× RELATED விழுப்புரம் அருகே அடுத்தடுத்தது 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து