×

பெருநகரங்களில் மெட்ரோ ரயிலால் கார் விற்பனை குறைந்தது: அமைச்சர் சம்பத் தகவல்

திருச்செந்தூர்: பெருநகரங்களில் மெட்ரோ ரயில் மூலம் எந்த இடத்துக்கும் சென்றுவிடலாம் என்பதால் கார் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அமைச்சர் சம்பத் கூறினார்.தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத்  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தை பொறுத்தவரை தனியார் மற்றும் அரசு வங்கிகளில் கடன் கொடுக்கும் சக்தி குறைந்துள்ளது. இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் உள்ளிட்ட 27 நகரங்களில் மெட்ரோ ரயில் வசதி வந்துள்ளது.

இதில் நாடு முழுவதும் தினமும் குறைந்தபட்சம் 2 லட்சம் பேர் பயணிக்கின்றனர். மேலும் 600 கிலோ மீட்டருக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. பெரு நகரங்களில் வேலை பார்ப்பவர்கள் மெட்ரோ ரயில் மூலம் எந்த இடத்திற்கும் சென்று விடலாம். இதனால் கார் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். கார் உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை பாதிக்கக்கூடாது என்பதில் தமிழக அரசு மிகவும் கவனமாக உள்ளது. இப்பிரச்னையை 6 மாதத்தில் கையாண்டு மத்திய அரசுடன் கலந்து பேசி நல்ல சூழ்நிலை உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Metro train,sales,decline, metropolis,Minister Sampath
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...