மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,000 கனஅடியாக சரிவு

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 12,176 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த  நீர்வரத்து, நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 12 ஆயிரம் கனஅடியானது. இதனால் நேற்று  இரவு 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. பாசனத்திற்காக, விநாடிக்கு 10,600 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 117.10 அடியாக இருந்த  நீர்மட்டம், நேற்று 117.30 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு  89.22 டிஎம்சி.

Related Stories: