அரசு உதவி பெறும் கல்லூரி காலி இடங்களுக்கு நாளை 2ம் கட்ட பி.எட் கலந்தாய்வு

சென்னை: அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள 208 பி.எட் இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2,040 பி.எட் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 3,800 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடந்தது. அதில் மாணவர் சேர்க்கைக்குபின் 10 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 208 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை கடற்கரையில் உள்ள லேடி வெலிங்டன் கல்விவியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெறுகிறது. தரவரிசையில் இடம்பெற்றுள்ள மாணவர்கள்(ஆகஸ்ட் 26ம் தேதி) நாளை காலை 9 மணிக்கு உரிய அசல் சான்றிதழ்கள், அவற்றின் நகல்களுடன் பங்கேற்கலாம்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளது. அதனால் ஏற்கனவே சீட் தேர்வு செய்த மாணவர்கள், தேர்வு செய்யாதவர்கள் வரும்பட்சத்தில் அவர்களுக்கு 2ம் கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கீடு செய்யப்படும். இதுதொடர்பாக தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.   


Tags : PET consultation , government, vacant college , vacancies tomorrow
× RELATED அதிகரித்து வரும் காலி பணியிடங்களால் திட்ட அறிக்கை தயாரிக்க தாமதம்