கொச்சியில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் நள்ளிரவில் தீ விபத்து

திருவனந்தபுரம்: கொச்சியில்  முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் வீட்டில் நேற்று அதிகாலை  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவரும், மனைவி மற்றும் குழந்தைகள்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்திய கிரிக்கெட் அணியில்  வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசாந்த். இவர் கேரள மாநிலம் கொச்சி இடப்பள்ளியில் மனைவி மற்றும்  குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஸ்ரீசாந்தின்  வீட்டில்  இருந்து புகை வந்துள்ளது.

இதைக்கண்ட பக்கத்து வீட்டினர் தீயணைப்பு  நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருக்காக்கரை மற்றும் காந்திநகர்  பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும்  பணியில் ஈடுபட்டனர்.  இதற்கிடையே தீ மளமளவென எரிந்ததால் வீட்டின் முதல் மாடியில் இருந்த ஸ்ரீசாந்த்,  அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலை  ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புப்படை வீரர்கள் ஜன்னல்  கண்ணாடியை உடைத்து ஏணி மூலம்  அவர்களை பத்திரமாக மீட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.  Tags : Kochi, Cricketer, Sreesanth,midnight
× RELATED கொச்சி அருகே மரடுவில் 4-வது கட்டிடத்தை...