×

லஷ்கர் அமைப்புடன் தொடர்பு பெண் உள்பட 2 பேர் சிக்கினர்: உளவுத்துறை தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: கேரளாவில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பெண் உள்பட 2 பேரை போலீசார்  பிடித்து விசாரித்து வருகின்றனர்.லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உதவி செய்து வந்ததை உளவுத்துறை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில், அவர் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் ரகீம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு போலீசார் வலை விரித்தனர். இந்நிலையில் அப்துல் காதர் ரகீமுக்கு  ெகாச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அப்துல் காதர் ரகீம் குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்தது.

அவர் ஒரு வழக்கு தொடர்பாக எர்ணாகுளம் நீதிமன்றத்திற்கு ஆஜராக வருவதாக அந்த பெண் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அப்துல் காதர் ரகீமை கைது செய்தனர். இவருக்கு கடந்த சில வருடங்களாகவே லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்து வந்தது. இவரது உதவியுடன் தான் தற்போது தமிழ்நாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என உளவுத்துறையினர் கருதுகின்றனர். தமிழ்நாட்டில்  6 தீவிரவாதிகள் ஊடுருவி  இருப்பதாக எழுந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வரும்   நிலையில், ேகரளாவில்  லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய 2 பேர்  பிடிபட்டுள்ளது மேலும் பதற்றத்தை  ஏற்படுத்தி உள்ளது.


Tags : Interaction , Lashkar ,Two trapped, woman
× RELATED இடி தாக்கி பெண் விவசாயி பலி