சிறப்பு சட்டம் ரத்து மூலம் காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைப்பு: அமித்ஷா பெருமிதம்

ஐதராபாத்: சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதன் மூலம் காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: மோடி தலைமையிலான மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 ஐ சமீபத்தில் ரத்து செய்தது. அந்த சட்டம் இருந்ததால் முழுமையாக இந்தியாவுடன் இணையாமல் இருந்த காஷ்மீர், தற்போது  முழுமையாக இந்தியாவுடன் இணைந்துள்ளது. நிஜாம் கட்டுப்பாட்டில் இருந்த ஐதரபாத்தை முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் போலீஸ் உதவியுடன் இந்தியாவுடன் இணைத்தார். இதனால் ஐதராபாத் இந்தியாவுடன் சேர்ந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: