மனிதனுக்கு தேவையான உடல் உறுப்புகளை மரபணு மாற்ற தொழில்நுட்பம் மூலம் குரங்கில் இருந்து உருவாக்க ஆராய்ச்சி: சீன மருத்துவர்கள் தீவிரம்

பெய்ஜிங்: பரிணாம வளர்ச்சியில் குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது ஒரு கொள்கை. இந்த கொள்கைக்கு வலுசேர்க்கும் வகையில் சீனாவில் மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். ஆம், மனிதனுக்கு  தேவையான உடல் உறுப்பை குரங்கில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் உருவாக்க மருத்துவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஜூவன் கார்லோஸ் இஸ்பிசுவா சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் ஆய்வகத்தில் தன்னுடைய நவீன ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வை ஸ்பெயினில் நடந்த தடை விதிக்கப்பட்டு  இருந்ததால் சீனாவில் மேற்கொண்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் உலகில் முதல் முறையாக மனிதன்-பன்றி உடலுறுப்பை உருவாக்கியவர் ஜூவன் இஸ்பிசுவா தான் என்பது குறிப்பிடத்தக்கது. மனித செல்களை வைத்து வெள்ளை எலி, பன்றி  ஆகியவற்றிலும் உடலுறுப்புகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.பெண் குரங்கின் உடலில், அதன் இயற்கையான மரபணுவின் செயல்பாட்டை தடுத்து நிறுத்திவிட்டு, அதன் கருப்பையில் உள்ள கருவில், ஊசி மூலம் மனித குருத்தணுவை செலுத்தி வளரச் செய்கின்றனர். குருத்தணுக்கள் என்பது மனித  உடலுறுப்பை வடிவமைப்பது, அதன் செயல்பாடுகள் போன்றவற்றை செய்பவை. இந்த குருத்தணுவை குரங்கின் கருவில் செலுத்திய பின்னர், அதன் உடலில் மனித உறுப்புகள்தான் வளரும்.

இந்த மரபணு மாற்று தொழில்நுட்ப ஆராய்ச்சி வெற்றி  பெற்றால், எதிர்க்காலத்தில் உடலுறுப்பு தானத்துக்காக யாரும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. ஆராய்ச்சி கூடங்களில் வளர்க்கப்படும் குரங்குகளில், அவரவர் ரத்த மாதிரிக்கு ஏற்ற குரங்கை தேர்வு செய்தால் போதும், அதில் இருந்து  பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள உறுப்பை அகற்றிவிட்டு, குரங்கின் உடம்பில் வளர்ந்திருக்கும் உறுப்பை பொருத்தி விட முடியும். இதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு  குறித்து மனித ஆய்வாளர்கள் ஒருபுறம் எச்சரிக்கை செய்துள்ளதையும் ஒதுக்கிவிட முடியாது. இதுபோன்ற ஆராய்ச்சிகள், இயற்கையை மீறி செயல்பட நினைக்கும் விஷயங்களாகும். ஒரு பிரச்னையை தீர்க்கபோய், அது வேறு பல பிரச்னைகளை  உருவாக்கிவிடக் கூடாது என்கின்றனர்.  அதாவது மரபணு மாற்று மூலம் செய்யப்படும் இந்த ஆராய்ச்சியில் மனிதனுடைய குருத்தணுவை குரங்கிற்கு செலுத்தும்போது, மனிதனுடைய ஸ்டெம் செல்கள் குரங்கின் மூளையில் கலந்துவிடுவதற்கு  வாய்ப்பு உள்ளது. இதனால் புதிய பிரச்னை உருவாகலாம் என்று எச்சரித்துள்ளனர். இதற்கு பதிலளித்த இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள மருத்துவ விஞ்ஞானியான எஸ்தர்லா நியுனிஜ், மனிதனுடைய குருத்தணுக்கள் குரங்கின் மூளையில் சேராதவாறு தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது. எனவே மனித செல்கள் தானாக  அழிந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மாசாசுசெட்டிஸ் பொது மருத்துவமனை ஆய்வகத்தில் மரபணு மாற்று சிகிச்சையில் பிரபல மருத்துவர் குழு புதிய ஆராய்ச்சில் இறங்கியுள்ளனர். அதாவது, பன்றியின் உடல் உறுப்புகளை குரங்குக்கு  பயன்படுத்தி அது எப்படி பலன் அளிக்9998767கிறது என்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த முறையில் வெற்றி கிடைத்தால் பன்றியின் உடல் உறுப்புகளை மனிதனுக்கு பயன்படுத்துவது குறித்து அடுத்த கட்ட ஆய்வில் இறங்க  திட்டமிட்டுள்ளனர். மரபணு மாற்று சிகிச்சையின் மூலம் பன்றியின் உடல் உறுப்புகளை குரங்குக்கு பொருத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பன்றியின் உடல் உறுப்புகளை நிராகரிக்காமல் குரங்கின் உடல் ஏற்றுக் கொண்டால், எதிர்காலத்தில்  பன்றியின் உடல் உறுப்புகளை மனிதனுக்கு பொருத்துவதில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மனித திசுக்களால் உருவான 3டி இதயம்

இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முதல் முறையாக 3டி அமைப்பிலான மனித இதயத்தை உருவாக்கியுள்ளனர். இதன் சிறப்பு அம்சம், இது முழுவதும் மனித திசுக்களை வைத்து, இதயத்தில் உள்ள ரத்தக்  குழாய்கள் மற்றும் இதய அறைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.ஒருவருக்கு இதயக் குறைபாடு ஏற்பட்டுள்ளது அவருக்கு வேறு இதயம் பொருத்த வேண்டும் என்றால் நாம் அதே ரத்த வகையைக் கொண்ட ஒருவரைத் தேடி அவரின் இதயம் நோயாளிக்குப் பொருந்துமா எனப் பார்த்த பிறகுதான் இதய மாற்று  சிகிச்சை நடைபெறும். ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 3டி இதயம் மனித திசுக்களால் உருவாக்கப்பட்டது.

ஒருவருக்கு இதயம் தேவைப்பட்டால் அவரின் திசுக்களைக் கொண்டு அவருக்குத் தேவையான அளவில் புதிய இதயத்தை  உருவாக்கலாம். அடுத்தபடியாக 3டி இதயத்தைச் செயல்படவைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த 3டி இதயம் நிச்சயமாக மனித உடலுக்குள் பொருத்தப்படும் ” எனக் கூறியுள்ளார். இதேபோல், 3டி  பயோ பிரிண்டிங் முறையில் மனித உடல் உறுப்புகளை உருவாக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

Related Stories: