×

எலெக்ட்ரிக் கார் ரேஞ்ச் அதிகப்படுத்தும் டாடா

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதில், ஹூண்டாய் முந்திக்கொண்டுள்ளது.ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 452 கி.மீ வரை பயணம் செய்ய முடியும். இந்தியாவில் தற்போது  விற்பனை செய்யப்படும் அதிக ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார் இதுதான். ஹூண்டாய் கோனா தவிர இந்திய மார்க்கெட்டில் இன்னும் ஒரு சில எலெக்ட்ரிக் கார்கள் கிடைத்து வருகின்றன. இதில், டாடா டிகோர் (Tata Tigor) எலெக்ட்ரிக் கார்  முக்கியமானது. டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் விலை சமீபத்தில் 80 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்ததே இதற்கு  காரணம்.டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் தற்போதைய மாடலில் 16.2 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 142 கி.மீ பயணிக்க முடியும். எனினும், புதிய வெர்ஷனை ஒரு முறை முழுமையாக சார்ஜ்  செய்தால் அதிகபட்சமாக 200 கி.மீ வரை பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், தற்போதைய மாடல்போல் அல்லாமல் இந்த சக்திவாய்ந்த புதிய வெர்ஷன் அனைவருக்கும் விற்பனைக்கு கிடைக்கும். டிகோர் காரின் தற்போதைய மாடல் மோட்டார் 4,500 ஆர்பிஎம்மில் 40 பிஎச்பி பவரையும், 2,500 ஆர்பிஎம்மில் 105  என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டிசி 15 kW பாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் இதன் பேட்டரியை வெறும் 90 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். டாடா டிகோர் காரின் புதிய வெர்ஷன் அதிக ரேஞ்ச்  கொண்டது என்பதால், நடைமுறை பயன்பாட்டிற்கு மிகவும் உகந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் தற்போதைய மாடலின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கி.மீ மட்டுமே.

எனினும் புதிதாக வரவுள்ள வெர்ஷனின் டாப் ஸ்பீடு இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிகோர் எலெக்ட்ரிக் கார் மட்டுமல்லாது வேறு சில எலெக்ட்ரிக் கார் பணிகளையும் டாடா நிறுவனம் செய்து வருகிறது. இதில்,  அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனீவா மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் வரும் 2020ம் ஆண்டு முதல் காலாண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இதன் விலை 15 லட்சம் ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என தெரிகிறது.  இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனம் அடுத்தடுத்து புதிய எலெக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டில் களமிறக்கி சரவெடி வெடிக்க காத்திருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளன.

Tags : Electric ,Car Range, Enhancing ,Tata
× RELATED காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்:...