புதிய மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுகம்

காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் மாருதி பிரெஸ்ஸா கார் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. மாருதி பிரெஸ்ஸா கார், 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வில் மட்டுமே கிடைத்து வந்தது. புதிய மாசு உமிழ்வு விதிகள்  காரணமாக, 1.3 லிட்டர் டீசல் இன்ஜினை தொடர்ந்து தக்கவைக்க முடியாத நிலை இருக்கிறது. எனவே, சியாஸ், எர்டிகா கார்களில் பயன்படுத்தப்படும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு, மாருதி பிரெஸ்ஸா காரிலும் வழங்கப்பட  இருக்கிறது. இப்புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 105 எச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.இப்புதிய பெட்ரோல் இன்ஜின் தேர்வு வரும் 2020ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இப்புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்  தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளது.

Advertising
Advertising

இப்புதிய மாடல்,  சந்தைக்கு வந்தபிறகு 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வு விற்பனையில் இருந்து விலக்கப்படும். புதிய பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் வரும் மாருதி பிரெஸ்ஸா காரின் டிசைனிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் வர  இருக்கிறது. புதிய கிரில் அமைப்பு, ஹெட்லைட் கிளஸ்டரில் சிறிய மாற்றங்கள் மற்றும் புதிய பம்பர் அமைப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்பட கூடுதல் சிறப்பம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.இந்த கார், 4 மீட்டர் நீளத்திற்குள் இருக்கிறது. மேலும், இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தினால் மட்டுமே வரிச்சலுகை பெற முடியும். ஆனால், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட இருப்பதால், வரிச்சலுகை  கிடைக்காது. எனவே, விலையும் கணிசமாக உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது. மாருதி எர்டிகா காரின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் மாடல் விற்பனையில் இருந்து விலக்கப்பட இருக்கிறது. அதேபோன்று, மாருதி பிரெஸ்ஸா டீசல் மாடல் அடுத்து  வரும் மாதங்களில் விற்பனையில் இருந்து விலக்கப்படும் வாய்ப்புள்ளது.

Related Stories: