பலகோடி சரக்கு கடத்தல் எஸ்.ஐ. கல்லாவில் கொட்டுது பணமழை

விழுப்புரம் மாவட்டத்தில் இசிஆர் வழியாகவும், டோல்கேட் வழியாகவும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டம் ஏன் அதைதாண்டி கடப்பாவுக்கே புதுச்சேரியிலிருந்து சரக்கு சப்ளை செய்யப்படுகிறதாம். டேங்கரில் மொத்தமாக லிக்கராகவும், சில சமயங்களில் பாட்டில்களிலும் கொண்டு செல்லப்படுகிறதாம். இதற்கு வழிகாட்டியாகவும்,  எஸ்கார்டாகவும் இருப்பது திருப்பதி பெருமாளின் பெயரைக்கொண்ட கோட்டக்குப்பம் கலால் எஸ்ஐயாம். எஸ்பியிடம் நற்பெயர், சான்றிதழ் வாங்குவதற்கும் கடத்தல் கும்பலிடம் ஒரு கேஸ் பார்சல் செய்து சில லட்சங்களில் மதுபாட்டில்,  கண்டமான காரை துரத்தி பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் உயர்அதிகாரிகள் மத்தியில் நற்பெயரை வாங்கியுள்ளாராம்.

சுதந்திரதினவிழாவில் சான்றிதழையும் பெற்ற அவர், இனிமேல் என்மீது எந்த புகார் சென்றாலும் எடுபடாது  என்று சக காவலரிடையே சவால் விட்டு கூறுகிறாராம். எஸ்ஐயின் வசூல் ஆட்டத்தை பார்த்து கோட்டக்குப்பம் உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளே அசந்துபோய் உள்ளார்களாம்.

Related Stories: