ஜெயக்குமார் நினைவு கேரம் இளையராஜா சாம்பியன்

சென்னை: லாசர் நினைவு கேரம் மன்றம் சார்பில், சென்னை மாவட்ட அளவிலான  ஜெயக்குமார் நினைவு சுழற்கோப்பைக்கான கேரம் போட்டிகள் நடந்தன.  பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடந்த இந்த போட்டி முதுநிலை, இரட்டையர், பதக்கம் பெறாதவர்கள் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டியில்  650 பேர் பங்கேற்றனர்.இறுதி போட்டியில் சீனியர் தனிப்பிரிவில் தரணி குமார் மற்றும் ராஜன் மோதினர். இதில் தரணி குமார் 9-25,  25-0, 18-17 என்ற புள்ளி கணக்கில் போராடி வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். இதே பிரிவில் சகாய பாரதி 3ம் இடத்தையும்,  டில்லிபாபு 4ம் இடத்தையும் பெற்றனர்.

இரட்டையர் பிரிவு பைனலில் பாரதிதாசன் - கிஷோர் குமார் இணை 19-8, 10-25, 14-11 என்ற புள்ளி கணக்கில் ரமேஷ்பாபு - ராஜன் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த பிரிவில் 3வது இடம்  தமிழ்ச்செல்வன் - அருண் கார்த்திக்கிற்கு கிடைத்தது. பதக்கம்  பெறாதவர்கள் பிரிவு இறுதிப் போட்டியில் இளையராஜா, அசோக்குமார் விளையாடினர். இளையராஜா 25-18 என்ற புள்ளி கணக்கில் அசோக்குமாரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். வெற்றி  பெற்றவர்களுக்கு தமிழ்நாடு கேரம் சங்க பொதுச்செயலாளர் மார்டின், பிஎஸ்என்எல் பொறியாளர் ஜெயஜோதி ஆகியோர்  பரிசுகள் வழங்கினர்.Tags : Jayakumar Memorial ,Carrom ,Ilayaraja, Champion
× RELATED ஹோபர்ட் டென்னிஸ் சானியா ஜோடி சாம்பியன்