வில் வித்தையில் வடசென்னை சிறுமி உலக சாதனை

சென்னை: கண்ணை கட்டியபடி, ஒரு மணி நேரத்தில் 307 அம்புகளை எய்து சென்னை சிறுமி சாதனை படைத்துள்ளார்.வண்ணாரப் பேட்டை கேஜி கார்டனை சேர்ந்த பிரேம்நாத் - லட்சுமி தம்பதியின் மகள் சஞ்சனா (4 வயது), கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது
3 மணி, 27 நிமிடங்களில் 1111 அம்புகளை எய்தி சாதனை படைத்தார்.

இது தவிர, வில் வித்தை போட்டியில்  மாநில அளவில் தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் நடந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில்,  சிறுமி சஞ்சனா கண்ணை கட்டிக் கொண்டு, ஒரு மணி நேரத்தில் 307 அம்புகளை  எய்து சாதனை படைத்தார். இதை பார்த்த பார்வையாளர்களும், ஆசிரியர்களும் சஞ்சனாவை பாராட்டினர். இந்த சாதனைக்கு பிறகு வண்ணாரப் பேட்டை வந்த சிறுமிக்கு அந்தப் பகுதி மக்கள் மேளதாளத்துடன் உற்சாகமான வரவேற்பு அளித்ததுடன், பரிசுப் பொருள் மற்றும்  பூங்கொத்து  கொடுத்து வாழ்த்தினர்.Tags : World record ,archery
× RELATED திண்டுக்கல் மாணவர் மீண்டும் உலகசாதனை...