உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்: சென்னையில் இன்று நடக்கிறது

சென்னை: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடக்கிறது.திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம், 25ம் தேதி(இன்று) காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி 100 அடி சாலையில் உள்ள இல்டன் ஓட்டலில் நடக்கிறது. கூட்டத்திற்கு திமுக  இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ஆர்.டி.சேகர், ப.தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, எஸ்.ஜோயல், ஆ.துரை  ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த கூட்டத்தில் திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, இளைஞர் அணியை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் அதிமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை  மக்களிடம் எடுத்து செல்வது, அதிமுக அரசுக்கு எதிராக ேபாராட்டம் குறித்தும் முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Tags : Udayanidhi Stalin, DMK, youth organizers,Chennai
× RELATED டெல்லியில் ஜேஎன்யூ. மாணவர்களுடன்...