வாக்குறுதிகளை காப்பாற்றும் வகையில் ரயில்வேயில் தனியார்மயத்தை கைவிடுங்கள்: வைகோ வேண்டுகோள்

சென்னை: ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை :2014 இல் பாஜ அரசு பொறுப்பு ஏற்றது முதல், ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த மே மாதம் இரண்டாவது முறையாகப் பொறுப்பு  ஏற்ற பின்பு, ‘100 நாள் செயல் திட்டம்’ என்ற பெயரில், ரயில்வே உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க பாஜக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Advertising
Advertising

நெரிசல் இல்லா வழித் தடங்களிலும்,  சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள வழித் தடங்களிலும், தங்க நாற்கரப் பாதை எனப்படும் சென்னை - மும்பை, மும்பை - டெல்லி, டெல்லி - கவுரா, ஹௌரா - சென்னை வழித்தடங்களிலும், தனியார் நிறுவனங்கள் தொடரிகளை ஓட்டுவதற்கு  உரிமம் அளிக்கின்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜதானி, சதாப்தி உள்ளிட்ட பிரிமியம் கட்டண ரயில்களைத் தனியார் இயக்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. ரயில்வே துறையை  தனியார்மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: