×

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஜயத் விருது

சவூதி: பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஜயத் விருது வழங்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கு ஆதரவளிக்க பாகிஸ்தான் வலியுறுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. முக்கியத்துவம் பெறுகிறது. பிரதமர் மோடி இரு நாட்டு நல்லுறவுக்கு மேற்கொண்ட பணிகளை போற்றும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆர்டர் ஆஃப் ஜயத் விருதை அறிவித்தது. இந்நிலையில் மூன்று நாடுகள் பயணத்தின் ஒரு கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இந்த விருதை பட்டத்து இளவரசரான முகமது பின் சயத் அல் நஹ்யான் வழங்கினார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் பல்வேறு நாடுகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் தோல்வியடைந்து வருகிறது. இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கு ஆதரவளிக்க பாகிஸ்தான் வலியுறுத்தி வரும் நிலையில் இந்தியாவுடனான தங்கள் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசரான முகமது பின் சயத் அல் நஹ்யானுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

Tags : PM Modi, UAE, Award
× RELATED சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய...