மத்திய உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி... நெல்லையில் 2ம் நாளாக போலீசார் தீவிர சோதனை

நெல்லை: இலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். இன்று 2ம் நாளாக நெல்லையில் பாதுகாப்பு நீடிக்கிறது. சரக டிஐஜி பிரவீண்குமார் அபிநயு, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அருண்சக்திகுமார, தலைமையில் மாவட்ட பகுதிகளிலும் மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம் டாமோ தலைமையில் துணை போலீஸ் கமிஷனர் சரவணன் மேற்பார்வையிலும் மாநகர பகுதிகளில் சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு தொடர்கிறது.

ரயில் நிலையம், சந்திப்பு பஸ்நிலையம், புதிய பஸ் நிலையம் வழிபாட்டு தலங்களில் போலீசார் சீருடையிலும் சாதாரண உடையிலும் நின்று கண்காணிக்கின்றனர். சிசிடிவி கேமரா வசதி உள்ள இடங்களில் அதன் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பணகுடி இஸ்ரோ மையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் இன்று காலை வந்த ரயில்களில் வந்து இறங்கிய பயணிகளிடம் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்டனர். நெல்லையப்பர் கோயிலில் ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் ெமட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனைக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  மேலும் வாகனங்கள் மூலமும் சுற்றிவந்து கண்காணிக்கின்றனர். முக்கிய சோதனை சாவடிகளில் விடியவிடிய வாகனசோதனை நடந்தது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் உள்ளவர்களையும் புறநகர் பகுதிகளில் நடமாடும் நபர்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர் கோயிலிலும் தீவிர சோதனை

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வெடிகுண்டு சிறப்பு எஸ்ஐ சின்னத்துரை மற்றும் எஸ்ஐக்கள் பாலசுப்பிரமணியன், பாஸ்கர் மற்றும் ேபாலீசார் கோயில் வாசல் முன்பு மெட்டர் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தி அதன் பின்னரே பக்தர்களை கோயிலுக்குள் செல்ல அனுமதித்தனர். மேலும் கோயிலை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: