ஆந்திரா, தமிழகத்தில் பெண்களை கொன்று நகைகளை கொள்ளை அடிக்கும் கும்பல் கைது

திருப்பதி: ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பகுதியில் தனியாக இருக்கும் பெண்களை கொலை செய்து நகைகளை திருடும் சைகோ கொலைகாரன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி பகுதியில் கடந்த ஜூலை மாதம் சரோஜா என்ற பெண்ணை மர்மக்கும்பல் கொலை செய்து நகையை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அரக்கோணத்தை சேர்ந்த ஆனந்த் என்பவனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து விசாரணையில் சரோஜாவின் முன்னாள் கணவர் கோபால் ரெட்டி மற்றும் அவரது மகன் நரசிம்மன் ஆகியோரிடம் இணைந்து சரோஜாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

Advertising
Advertising

மேலும் அரக்கோணம் பகுதியில் சின்னக்கயலுர்  கிராமத்தை சேர்ந்த ஒரு விதவை பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது. அதுபோல அரக்கோணம் பகுதியில் சங்கர் என்பவருடன் இணைந்து பணத்திற்காக பரத் என்னும் 8 வயது சிறுவனை கொலை செய்து பாலத்திற்கு அடியில் புதைத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கோபால் ரெட்டி, நரசிம்மன், சங்கர் மற்றும் ஆனந்த் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: