முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு காங்கிரஸ் கட்சி இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சி, ஸ்ரீ அருண் ஜேட்லியின் மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருந்துவதாகவும், அவரது குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். துக்கத்தின் இந்த நேரத்தில் நம் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன என்று தெரிவித்துள்ளது.


Tags : Arun Jaitley, Congress, condolences
× RELATED பாஜக ஆட்சியில் மிகப்பெரும்...