ரூ.30 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் முன் எப்போதும் இல்லாத அளவில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 29,440- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.3,680-க்கு விற்பனையாகிறது. இதையடுத்து, ஆபரண தங்கத்தில் விலை சவரன் ரூ.30,000- த்தை நெருங்குகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 49,200 ஆக உள்ளது. ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.49,20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.28,800- ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.3000 உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயை தாண்டியது. ஜூலை மாதம் சவரனுக்கு 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் 27 ஆயிரத்தைக் தாண்டியது. இதையடுத்து அடுத்த 4 நாட்களில் 28 ஆயிரத்தையும் தாண்டியது. ஆகஸ்ட் 14ம் தேதி 29 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை தற்போது 30,000 ரூபாயை தாண்டும் என தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

தங்கத்தின் விலை உயர்வதற்கான காரணங்கள்:

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காணமாக தங்கத்தில் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக பொருளாதாரம் சீரான நிலைமையில் இல்லாததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், பெரிய முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்வது கூட காரணமாக இருக்கலாம். இது ஒரு புறம் இருக்க பெரிய வல்லரசு நாடுகளும் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. எதிர்காலங்களில், பொருளாதாரத்தை பொறுத்தவரை என்ன வேண்டுமானாலும் நிகழக்கூடிய வாய்ப்பு உள்ளதால், பல்வேறு நாடுகள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன. எனவே, தங்கம் விலை இன்னும் உயரும் என தங்க நகை வியாபாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்திற்குள் 30,000-த்தை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: