×

ப.சிதம்பரம் கைது நடவடிக்கை மத்தியஅரசின் அதிகார துஷ்பிரயோகம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

சென்னை; புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று காலை 10.15 மணி விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சிதம்பரத்தை கைது செய்த விதம் பாஜ அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என மிகத் தெளிவாகத் தெரிகிறது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஏழு மாதங்களாக நிலுவையில் இருந்த வழக்கில் சிதம்பரத்தின் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்தில் சிபிஐ அமலாக்கத்துறை  அவரை விசாரிக்கிறோம் எனறு அவரது வீட்டுக்கு போய்விட்டு வந்திருக்கின்றனர்.  இந்த வழக்கில் திடீரென அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? சிபிஐ, கடந்த ஏழு மாதமாக சிதம்பரத்தை அழைத்து விசாரித்துள்ளனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஐந்து மணி நேரம் தெளிவாக பதில் அளித்துள்ளார்.

ஆனால் தற்போது திடீரென அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியையும் உள்நோக்கத்தையும் காட்டுகிறது. குற்றவாளி கூறிய வார்த்தையை வைத்து கைது செய்வது விந்தையாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை யாராலும் ஏற்க முடியாது. தங்களிடம் மிருக பலம் இருக்கிறது என்பதால் காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவரை ஒடுக்க நினைப்பது தவறானது. நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்ததுபோல் இருக்கிறது.  ஒரு கொலைக் குற்றாவளி கொடுத்த வாக்குமூலத்தின்படி ஒருவரை கைது செய்வதை யாரும் ஏற்க முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : P. Chidambaram, Arrest, Central Government, Puducherry Chief Minister Narayanasamy
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...