பொதுவாழ்வில் கறைபடிந்தவர்கள் அதிமுக அமைச்சர்கள்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: அதிமுக அமைச்சர்கள் போல் பொது வாழ்க்கையில் கறைபடிந்தவர்கள் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. சிபிஐ விசாரணைக்கும் வழக்கிற்கும் உட்பட்டு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் மற்றவர்களை குறை சொல்வதற்கு தகுதி கிடையாது. அமித்ஷா மற்றும் பாஜகவின் தவறான கொள்கைகளை மக்களுக்கு மிகத்தெளிவாக வெளிச்சம்போட்டு காட்டுவதால் சிதம்பரத்தை குறிவைத்து தாக்குகிறார்கள்.  இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

Tags : Minister of Public Affairs, AIADMK, KS Alagiri
× RELATED நீட் தேர்வு குறித்து பேரவையில் அமைச்சர் கேள்விக்கு கே.எஸ்.அழகிரி பதில்