தமிழகம் முழுவதும் 7 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 7 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்ட வடகாடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாலமுருகன் வேலூர் சிபிசிஐடி டிஎஸ்பியாகவும், வேலூர் மாவட்ட ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய புகழேந்தி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வெங்கடாசலம் தர்மபுரி மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாகவும்,

வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சாந்தலிங்கம் திருச்சி மண்டல எஸ்சி, எஸ்டி விஜிலென்ஸ் பிரிவு டிஎஸ்பியாகவும், வேலூர் மத்திய புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வெங்கடேசன் கடலூர் மாவட்ட திட்டக்குடி சப்-டிவிசன் டிஎஸ்பியாகவும், சென்னை பெரம்பூர் ரயில்வே காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பிரவீன்குமார் வேலூர் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாகவும், வேலூர் எஸ்ஐயு சிஐடியில் இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்செல்வன் வேலூர் எஸ்ஐயு எஸ்பிசிஐடி டிஎஸ்பியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: