நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இன்ஜினியரிங் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர்கள் : ஆந்திராவில் பரபரப்பு

திருமலை : நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவியை மிரட்டி தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குரபலகொட்டாவை  சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் மதனபல்லி அருகே உள்ள அந்திரிநீவா கால்வாய் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 வாலிபர்கள் மாணவியையும், அவரது நண்பரையும் ‘நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?’ எனக் கேட்டு தகராறு செய்தனர்.  அவர்கள் மாணவியின் நண்பரை சரமாரியாக தாக்கி விரட்டி அடித்தனர். பின்னர், மாணவியை 3 பேரும் சேர்ந்து அந்திரிநீவா கால்வாய்க்கு தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர்.  

இதனால், கதறி அழுத மாணவியிடம், ‘இச்சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொன்று விடுவோம்’ என அவர்கள் மிரட்டினர். இதனால், அச்சமடைந்த மாணவி யாருக்கும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இது குறித்து அவரது தாய் விசாரித்தபோது, மாணவி நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். அதிர்ச்சியடைந்த அவரது தாய்ல குரபலகோட்டா போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வழக்குப்பதிவு செய்து, கமட்டனவாரிபல்லி கிராமத்தை சேர்ந்த அஷ்ரப் (25), ஜெயச்சந்திரா (28), மஸ்தான்வலி (30) ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Engineering Student rape , suspect arrested
× RELATED ரவுடி கொலையில் முக்கிய குற்றவாளி கைது