பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பின் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்ப்பு

புதுடெல்லி:  பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பயங்கரவாத கண்காணிப்பு அமைப்பான, ‘நிதி நடவடிக்கை பணிக் குழு’வின் (எப்ஏடிஎப்)  ஆசிய பசிபிக் குழு கூட்டம், ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
இதில், தீவிரவாத அமைப்புகளுக்கு புகலிடம் கொடுத்து, நிதியுதவி செய்து வரும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக இந்திய அதிகாரி கூறுகையில், ‘`தீவிரவாதத்தை கட்டுப்படுத்த ஆசிய பசிபிக் குழு நிர்ணயித்துள்ள 40 அம்சங்களில் 32 அம்சங்களை பாகிஸ்தான் நிறைவேற்றாதது கண்டுபிடிக்கப்பட்டதால்,  அந்த நாடு கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது,’’ என்றார். மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘‘எப்ஏடிஎப் விதித்துள்ள 15 மாத அவகாசம் வரும் அக்டோபரில் நிறைவடைவதை தொடர்ந்து, கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெறுவதை தடுக்க அந்த நாடு தீவிர கவனம் செலுத்தி வருகிறது,’’ என்றார்.


Tags : Pakistan joins black list ,terrorist fund ,monitoring system
× RELATED தீவிரவாத தலைவன் சயீத்துக்கு 11 ஆண்டு...