காவல் உதவி மையம் திறப்பு

புழல்: சென்னை மாநகராட்சி, புழல் வடபெரும்பாக்கம் 17வது வார்டு பகுதியில் சிறுதொழில் முனைவோர் சங்கம் சார்பில், செங்குன்றம் காவல் நிலையத்தின் கீழ் செயல்படும் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறுதொழில் முனைவோர் சங்க தலைவர் மோகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் திலிப்குமார் ஜெயின், பிரபுராமன், கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாதவரம் துணை கமிஷனர் ரவளிப்பிரியா கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட காவல் உதவி மையத்தை திறந்து வைத்து, சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், புழல் துணை கமிஷனர் ரவி, செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜவஹர், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் புழல் நாராயணன், வழக்கறிஞர்கள் ஜெய்சங்கர், பார்த்தசாரதி, குமரன் மற்றும் சங்க நிர்வாகிகள், கிராம நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Opening ,Police Assistance Center
× RELATED சுரங்கப்பாதை திறப்பு