எஸ்ஐ மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றவர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் நாராயணசாமி தோட்டம் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தங்கம் (52). இவரது கணவர் சுஜித்குமார். இவர்களது வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் மாதவன் (40). இவர், கடந்த 6 மாதமாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அவர்களுக்குள் நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

ஆத்திரமடைந்த மாதவன், தம்பதியை தரக்குறைவாக திட்டியுள்ளார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசில் தங்கம் புகார் செய்தார். அதன்பேரில், மாதவனிடம் விசாரணை நடத்துவதற்காக பயிற்சி எஸ்ஐ ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது, “என்னை கைது செய்தால் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொள்வேன்,” என கேனுடன் நின்று மிரட்டியுள்ளார். அவரை பிடிக்க சென்றபோது, பயிற்சி எஸ்ஐ ஆனந்தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர், ஒருவழியாக அவரை போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்ட மாதவனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்.

Related Stories: