×

இலங்கையில் 4 மாதத்துக்கு பிறகு அவசரநிலை பிரகடனம் ரத்து : அரசு அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தில், 3 நட்சத்திர ஓட்டல்கள், 3 தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. முஸ்லிம் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 258 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்துக்குப்பின் இலங்கையில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம், யாரை வேண்டுமானலும், இலங்கை பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்த தாக்குதலில் நேரடி தொடர்புடையவர்கள் கொல்லப்பட்டனர், சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர் .இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையால், அங்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 22ம் தேதியன்று நீட்டிக்கப்பட்டு வந்த அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அதிபர் சிறிசேனாவிடம், சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, இலங்கையில் அவசர நிலை நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.


Tags : Sri Lanka cancels, Emergency Declaration ,after four months
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு