×

சிறுபான்மையினர் மீது அடக்குமுறை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பாக்.குக்கு கண்டனம்

ஐநா. : சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறையை பாகிஸ்தான், சீனா ஆகியவை கைவிட வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மத அடிப்படையில் வன்முறைக்கு ஆளாகுபவர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் முதல் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய சர்வதேச மதச்சுதந்திரத்துக்கான அமெரிக்க தூதர் சாமுலே் பிரவுன்பேக், ‘‘நாடுகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு மதச் சுதந்திரம் மிக முக்கியமானது.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் பாகுபாடான சட்டங்களாலும், சில அமைப்பினராலும் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அதேபோல், சீனாவிலும் மதச் சுதந்திரத்துக்கு முறையற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இங்கு கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், உகர், கசக்ஸ், திபெத் புத்தமதத்தினர் ஆகியோர் துன்புறுத்தலுக்கும், அடக்குமுறைக்கும் ஆளாகின்றனர். இதை சீனா முடிவுக்கு கொண்டு வந்து அனைவரது மதச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்,’’ என்றார். இதேபோல், இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும், பாகிஸ்தான், சீனாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் அடக்கு முறைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

கர்தார்பூர் பாதையை திறக்க பாகிஸ்தான் தயார்


ஆப்கானிஸ்தான்  எம்.பி.க்கள் மற்றும் சிவில் சொசைட்டி குழுவினர் பாகிஸ்தான் வெளியுறவு  அமைச்சர் குரேஷியை இஸ்லாமாபாத்தில் நேற்று சந்தித்தனர். அப்போது அவர்களிடம்  பேசிய குரேஷி, ‘‘இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரித்தாலும், பாபா குரு நானக்கின் 550வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் சீக்கிய யாத்திரிகர்களை, எல்லை அருகேயுள்ள தர்பார் சாகிப் குருதுவாராவுக்கு வரவேற்க கர்தார்பூர் பாதையை திறந்துவிட பாகிஸ்தான் தயாராக இருக்கிறது’’ என்றார்.

Tags : Repression of Minorities ,UN Security Council
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...