துளித் துளியாய்

* யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பிரதான சுற்று நாளை மறுநாள் தொடங்குகிறது. ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் முதல் நிலை வீரர், வீராங்கனையாக செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், நவோமி ஒசாகா (ஜப்பான்) அறிவிக்கப்பட்டுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நட்சத்திர வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) - மரியா ஷரபோவா (ரஷ்யா) மோத உள்ளது ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.
* யுஎஸ் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் (89வது ரேங்க்), ரஷ்யாவின் டானில் மெட்வதேவை (5வது ரேங்க்) எதிர்கொள்கிறார்.
* ஸ்பெயினில் நடந்த உலக இளைஞர் வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
* உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் நடுவர்கள் செயல்பாடு மிக மோசமாகவும், பாரபட்சமாகவும் இருந்ததாக இந்தியாவின் சாய்னா நெஹ்வால், பாருபள்ளி காஷ்யப் குற்றம்சாட்டியுள்ளனர்.
* இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து பரிசோதனைக் கூடத்துக்கான அங்கீகாரம் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

Tags : All sports
× RELATED சில்லி பாயின்ட்...