‘மோடியின் நல்ல செயல்களை ஆதரிக்க வேண்டும்’ ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு சிங்வி, சசிதரூர் திடீர் ஆதரவு

புதுடெல்லி:முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ‘‘கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மோடி செய்த பணிகளுக்காகத்தான், அவர் கூடுதல் வாக்குகளுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். அவரது பணியை நாம் அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது,’’ என்றார். இது குறித்து கருத்து தெரிவித்த மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, ‘செயல்பாடுகளில் நல்லது, கெட்டது என எப்போதும் இருக்கும்.

அவற்றை வேறுபாடின்றி மதிப்பிட வேண்டும். ஏழைப் பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுத்தது எல்லாம் மோடியின் நல்ல செயல்களில் ஒன்று,’ என  டிவிட்டரில் கருத்து தெரிவித்தார். இதேபோல் காங்கிரஸ் எம்.பி சசிதரூரும், ‘‘மோடி சரியானதை சொல்லும் போதும், செய்யும்போது, அவரை பாராட்ட வேண்டும் என நான் 6 ஆண்டுகளாக கூறுவது உங்களுக்கு தெரியும். இது, அவர் தவறு செய்யும்போது, நாம் செய்யும் விமர்சனத்துக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். ’’ என்றார்.


Tags : Singhvi, Sasidarur abrupt support, Jairam Ramesh's comments
× RELATED திமுகவுக்கு காங்கிரஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும்: கே.எஸ்.அழகிரி அறிக்கை