கேரளாவில் இன்று கனமழை வாய்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று முதல் மீண்டும் மழை தீவிரமடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், இடுக்கி உட்பட 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப் பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டது.  100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், கேரளாவில் ் இன்று முதல் மீண்டும் மழை தீவிரமடையும் என திருவனந்தபுரம் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் கேரளாவின் பல பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புக்கும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags : Heavy rain , Kerala today
× RELATED வெயில் கொளுத்திய நிலையில் சென்னையில்...