×

தனியார் கல்லூரி மருத்துவ இடங்களுக்கு 27ல் கலந்தாய்வு

சென்னை : சென்னை மாங்காட்டில் செயல்பட்டு வரும் முத்துக்குமரன் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை வரும் 27ம் தேதி நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.  2017ம் ஆண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தமிழக அரசு நீட்டில் இருந்து விலக்கு கோரிய நிலையிலும் மத்திய அரசு தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தரவில்லை. இந்தநிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5ம் தேதி நடந்தது. ஜூன் 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஜூன் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாணவர்கள் இணையதளம் மூலம் மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர். ஜூலை 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு நடந்தது.

அந்த கலந்தாய்வில் சீட் தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரி சேர்வதற்கு 2 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தநிலையில், சென்னை மாங்காட்டில் செயல்பட்டு வரும் முத்துக்குமரன் மருத்து கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்திகொள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளது. அதன்படி, அந்த கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு ஆகஸ்ட் 27ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. அரசு ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 731 வது ரேங்கிற்கு மேல் பெற்றவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தரவரிசையில் இடம்பெற்றுள்ள அனைவரும் கலந்தாய்விற்கு அழைக்கபட்டுள்ளனர். 


Tags : Consultation ,27 for private college, medical places
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...