9 மாதம் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு கடும் சரிவு

புதுடெல்லி : டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த 9 மாதம் இல்லாத  அளவிற்கு, கடுயைாக சரிந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72  ரூபாயாக சரிவடைந்துள்ளது. நேற்று காலை 9.20 மணி நிலவரப்படி, ரூபாய் மதிப்பு 72.02 ஆக குறைந்தது.  டாலருக்கு எதிராக இப்படி மோசமாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது  முதலீட்டாளர்கள், வர்த்தகர்களை அதிர வைத்துள்ளது. இந்திய ரூபாயின்  வீழ்ச்சிக்கு, அமெரிக்க டாலர் மற்றும் அந்நிய முதலீடுகள் இந்தியாவில்  இருந்து  வெளியேறுவதே காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள்  தெரிவித்துள்ளனர். கச்சா  எண்ணெயின் விலை அளவு 0.75 சதவீத‍ம்  அதிகரித்துள்ளது. உலக அளவில் ஒரு பேரல்  கச்சா எண்ணெயின் அளவு 60.75  அமெரிக்க டாலராக உள்ளது. சந்தை  மூலதனத்திலிருந்து வெளிநாட்டு நிறுவன  முதலீட்டாளர்கள் 902.99 கோடி ரூபாயை  வெளியே எடுத்துள்ளதாக தேசிய பங்குச்  சந்தையின் ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.  

விற்பனை மீதான அழுத்தத்தின்  காரணமாக உள்நாட்டு பங்குச்  சந்தைகள் கடுமையாக சரிவைச் சந்தித்துள்ளன.  அதனால், சென்செக்ஸ் 587  புள்ளிகள் குறைந்து 36,473 முடிவடைந்த‍து. கடந்த  மார்ச் 5ம் தேதியிலிருந்து  இதுதான் மிகக் குறைந்த அளவு. நிப்டி 177  புள்ளிகள் குறைந்து 10,741  புள்ளிகளில் நிறைவடைந்த‍து. பிப்ரவரி 20ம்  தேதியிலிருந்து இதுதான் மிக‍க்  குறைந்த அளவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே,  பல்வேறு தொழில்களும் கடுமையான நசிவை சந்தித்து வரும் நிலையில், அந்நிய  முதலீட்டாளர்களும் வெளியேறுவதால், இந்திய வர்த்தகம் கடும் பாதிப்பை  சந்தித்து வருவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: