முத்தலாக் சட்டத்தை எதிர்த்து வழக்கு மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான 4 மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதற்கு, முஸ்லிம் மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, ‘இச்சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை நீதிபதிகள் ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சல்மான் குர்ஷித், ‘‘முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது, 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக் கூடிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படும் ஒரு வழக்கம், பெண்களுக்கான உரிமைகளை மறுக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இந்த சட்டத்தில் உள்ள பல அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டும்,’’ என்றார். இவற்றை ஆய்வு செய்வதாக ஒப்புக் கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு ேநாட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Stories: