பனியன் கம்பெனியில் 200 பெண்கள் மயக்கம்

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரையில் தனியார் பனியன் நிறுவனம்  உள்ளது. இங்கு 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். நிறுவனத்துக்கு சொந்தமான கேன்டீன், அருள்புரம் சேகாம்பாளையத்திலுள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை சாப்பிட்ட 200 பெண்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தகவலின்பேரில், பல்லடம் போலீசார் சென்று, தொழிலாளர்களை மீட்டு பல்லடத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில்  சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இவர்களில் 2 பேர், கோவை மற்றும்  திருப்பூர் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்பின், உணவு பாதுகாப்பு துறையினர் வந்து, கேன்டீன் உணவை சோதனைக்கு எடுத்து சென்றனர். பனியன் கம்பெனியில் 200 பெண்கள் மயங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertising
Advertising

Related Stories: