லட்சத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் ஜாமீனில் விடுவிப்பு

நாகர்கோவில்:  குமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த வில்லியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த மணி, வில்லியம், நசியான், டெரின், கிளிட்டஸ், ஜோர்ஜித், பினு, சக்திவேல் மற்றும் கேரளாவை ேசர்ந்த முத்து அலி ஆகியோர் கடந்த மே மாதம் தேங்காப்பட்டணத்தில் இருந்து ஆழ்கடல் மீன் பிடிப்பதற்காக லட்சத்தீவு பகுதிக்கு சென்றனர்.  மே மாதம் 24ம் தேதி லட்சத்தீவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படை சந்தேகத்தின் பேரில் மீனவர்களையும், விசைப்படகையும் சிறை பிடித்தார்கள். சுமார் 25 நாட்கள் மீனவர்கள் விசாரணை கைதிகளாக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தார்கள்.

Advertising
Advertising

பின்னர் ஜூன் மாதம் 18ம் தேதி 8 மீனவர்களையும் லட்சத்தீவு ஒழுங்கு முறைப்படி, மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 8 ேபரையும் லட்சத்தீவு சிறையில் அடைத்தார்கள். சிறையில் அடைக்கப்பட்ட 8 மீனவர்களும் தங்களை ஜாமீனில் விடுவிக்கும்படி லட்சத்தீவில் உள்ள மாவட்ட கவரட்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். விசாரணைக்குபின் மீனவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனில் வெளிவந்த மீனவர்கள் இன்று குமரி திரும்புகிறார்கள்.

Related Stories: