×

ஈரோட்டில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு... 2வது நாள் முகாமில் 2,700 பேர் பங்கேற்பு

ஈரோடு: ஈரோட்டில் இன்று 2வது நாளாக நடந்த இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 2,700 பேர் கலந்து கொண்டனர். இந்திய ராணுவத்தில் சோல்ஜர், சோல்ஜர் டெக்னிக்கல், அம்யூனிசன், ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் ஈரோடு வஉசி மைதானத்தில் நேற்று தொடங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில் ஈரோடு, கோவை, தருமபுரி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளான நேற்று கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர்.

2வது நாளான இன்று தேனி மாவட்டத்தை சேர்ந்த 2,700க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். அதிகாலையில் தொடங்கிய முகாமில் அனுமதி சீட்டு வைத்திருந்த இளைஞர்களை ஒவ்வொரு குழுக்களாக பிரித்து முதல் தகுதி தேர்வாக 1,600 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதில் வெற்றி பெற்ற இளைஞர்கள் அடுத்த கட்டமாக உடல் திறனறிதல் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு அடுத்தடுத்து தோ்வுகளில் பங்கேற்றனர். முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

Tags : Recruitment to the Army
× RELATED திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள்...