×

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 228 புள்ளிகள், நிஃப்டி 88 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 228.23 புள்ளிகள் உயர்வுடன் 36701.16 புள்ளிகளாக நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 88 புள்ளிகள் உயர்வுடன் 10829.35 புள்ளிகளாக உள்ளது.

மும்பை பங்குசந்தையில் ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ், வேதாந்தா, இன்போசிஸ் நிறுவன பங்குகள் 16 முதல் 78 புள்ளிகள் வரை உயர்வுடன் காணப்பட்டன. ஐடிசி, ஹெச்டிஎப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ்லேண்ட் பேங்க், கோடாக் மஹேந்திரா, ஹெச்யுஎல் நிறுவன பங்குகள் விலை 7 முதல் 26 புள்ளிகள் வரை சரிந்தது.

தேசிய பங்குச்சந்தையில் ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, ஐஓசி, டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ், வேதாந்தா நிறுவன பங்குகள் 5 முதல் 18 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஐடிசி, ஹெச்டிஎப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ்லேண்ட் பேங்க், லார்சென், ஹெச்யுஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 1 முதல் 6 புள்ளிகள் வரை சரிந்தது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் ரூ.3600க்கு விற்பனையானது. ஒரு பவுனுக்கு ரூ.64 குறைந்து ரூ.28800க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ. 48.20ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.48200ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags : Stock, Sensex, Nifty
× RELATED காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்:...