மழைக்கு ஒழுகும் ரேசன் கடை... பாலிதீன் கவரால் மேற்கூரையை மூடிய அவலம்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே புளியந்துறை கிராமத்தில் ரேஷன் கடை கட்டிடத்தின் மேற்கூரை பாலிதீன் பேப்பரால் மூடப்பட்டு அவல நிலையில் உள்ளது. நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே புளியந்துறையில் ரேஷன் கடை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்தக் கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளதால் மழை பெய்யும் போது மழை நீர் கசிந்து உள்ளே வருகிறது. கட்டிடத்தின் சுவர்களிலும் விரிசல் விழுந்துள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியமான மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது.

Advertising
Advertising

மகேந்திரப்பள்ளி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்தக் கட்டிடத்தின் மேற்கூரையின் பாலீதீன் தாள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பாலிதீன் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பற்ற ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: