செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

சென்னை: செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கை: 6491 காலிப்பணியிடங்களை நிரப்பு அறிவிப்பாணை கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி காலை 301 மையங்களிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்காக 16.30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது பயனாளர் எண் மற்றும் பிறந்த தேதியினை அளித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பம் நிராகரிப்புக்கான காரணத்தை தெரிந்துகொள்ளலாம்.

Advertising
Advertising

சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக்கட்டணம் ரூ.100 செலுத்தியதற்கான சீட்டின் நகலுடன் விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்ப பதிவு எண், விண்ணப்ப தேர்வுக் கட்டணம், கட்டணம் செலுத்திய இடம், அதன் முகவரி, பணம் செலுத்தியதற்கான ஐடி மற்றும் தேதி ஆகிய தகவல்களுடன் contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 28ம் தேதிக்குக்குப் பிறகு பெறப்படும் கோரிக்கைகளின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது. மேலும் இது தொடர்பான தகவல்களுக்கு 18004251002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: