×

பங்குச்சந்தை முதலீடுகள் மீதான உபரி வரி ரத்து; குறுகிய, நெடுங்கால முதலீடுகளுக்கான உபரி வரி ரத்து : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி : நாட்டில் நிலவி வரும் பொருளாதார தேக்கநிலை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து வருகிறார். அவர் விளக்கம் அளித்தது பின்வருமாறு :

*இந்திய பொருளாதார நிலை சீராக உள்ளது, சிறு சிறு குறைபாடுகள் களையப்படும்.

*வரி சீர்திருத்தம் உள்ளிட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது

*வருமான வரித் தாக்கலை ஊக்குவிக்க, அதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன

*ஜி.எஸ்.டி வரி செலுத்துவோருக்கு, அவர்களுக்கான ரீபண்ட் உடனுக்குடன் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது

*பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எவ்வித தாமதமும் இன்றி, நடவடிக்கை எடுக்கப்படுகிறது

*வரி ஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், வெளிப்படையாக, சட்டப்படி நடவடிக்கை

*தொழில் முனைவோர் மிக எளிதாக தொழில் தொடங்க மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவுகிறது

*சி.எஸ்.ஆர் நிதியை வழங்காத பெரு நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை ஒருபோதும் எடுக்கப்பட மாட்டாது

*சி.எஸ்.ஆர் பங்களிப்பை அளிக்காத பெருநிறுவனங்கள் மீது சிவில் சட்டத்தின்படியே நடவடிக்கை

*ஜி.எஸ்.டி வரி நடைமுறையில் உள்ள அனைத்து சிக்கல்களும் களையப்படும் என உறுதியளிக்கிறேன்.

*பங்குச்சந்தை முதலீடுகள் மீதான உபரி வரி ரத்து; குறுகிய, நெடுங்கால முதலீடுகளுக்கான உபரி வரி ரத்து

Tags : Cancellation of surplus tax on stock market investments; Cancellation of Surplus Tax on Short and Long Term Investments: Federal Finance Minister Nirmala Sitharaman
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்