மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய பொருளாதாரம் நல்ல நிலையிலேயே உள்ளது : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி : நாட்டில் நிலவி வரும் பொருளாதார தேக்கநிலை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து வருகிறார். அவர் விளக்கம் அளித்தது பின்வருமாறு :

Advertising
Advertising

*சர்வதேச அளவில் பொருளாதார நிலை மோசமாக உள்ளது.சர்வதேச பொருளாதார ஜிடிபி 3.2% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

*அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ந்து நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது.

*மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது,  இந்திய பொருளாதாரம் நல்ல நிலையிலேயே உள்ளது.

*இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வேகமான வளர்ச்சியில் இருந்து வருகிறது.  

*அமெரிக்கா மற்றும் சீனாவை விட இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகம்.

*உலக அளவில் தேவை குறைந்துள்ளது - சீனா தனது கரன்சியின் மதிப்பை குறைத்தது பிரச்சனைக்கு காரணம்

*அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

Related Stories: