×

இந்தியா-பிரான்ஸ் இடையே நல்லுறவு நிலையாக இருக்கிறது: பாரீசில் இந்தியர்களிடையே பிரதமர் மோடி பேச்சு

பாரீஸ்: இந்தியா - பிரான்ஸ் இடையே நல்லுறவு நிலையாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் யுனெஸ்கோ நிறுவன தலைமையகத்தில் இந்தியர்களிடையே பிரதமர் மோடி பேசினார். பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று பிரான்ஸ் சென்றடைந்த அவரை தலைநகர் பாரீசில் அந்த நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் வரவேற்றார். பாரீஸ் அருகே உள்ள சாண்டிலி அரண்மனையில் மேக்ரானுடன் இருநாட்டு உறவு, டிஜிட்டல், சைபர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். தீவிரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து இணைந்து செயல்பட உறுதியேற்றனர்.

மேலும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், காஷ்மீர் பிரச்சனையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் மூன்றாவது நாடு தலையிடவோ, வன்முறையை தூண்டவோ கூடாது. அந்த பிராந்தியத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும். இதனை தொடர்ந்து இன்று பாரீசில் இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, இந்தியாவும், பிரான்சும் எப்போதும் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் இணைந்து செயல்பட்டு வருகிறது. பாரீஸ் பிரகடன இலக்கை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் இந்தியா எட்டும். மேலும், ஆட்சியை நடத்திச் செல்வது மட்டுமே இலக்கு அல்ல; புதிய இந்தியாவை கட்டமைப்பதே முக்கிய இலக்கு. புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர். மக்களுக்கு செய்ய முடியாத பல நலத்திட்டங்கள் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. 2025-ம் ஆண்டில் காசநோய் இல்லா இந்தியா உருவாக்கப்படும் என்று மோடி கூறியுள்ளார். இந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேவேளையில், நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மேலும், தீவிரவாதத்தை தீவிரவாதத்தை இந்தியா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் 24-ம் தேதி பக்ரைன் செல்லும் பிரதமர் மோடி 25-ம் தேதி மீண்டும் பிரான்சில் உள்ள பியாரிட்ஸ் நகருக்கு திரும்புகிறார். அங்கு 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்.

Tags : India, France, Paris, Indians, Prime Minister Modi, Emmanuel Macron
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...