×

கணக்கில் வராத சொத்துக்கள் எதுவும் தமக்கு இல்லை; கார்த்தி சிதம்பரம் எம்.பி. அறிக்கை

சென்னை: கணக்கில் வராத சொத்துக்கள் எதுவும் தமக்கு இல்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார். கணக்கில் வராத சொத்துக்கள் எதுவும் இருந்தால் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கணக்கில் வராத சொத்துக்கள் இருப்பதாக சில தொலைக்காட்சிகளில் வெளியான தகவலுக்கு கார்த்தி சிதம்பரம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நான் மக்களவை உறுப்பினராக உள்ள நிலையில் சொத்துக்கள் பற்றிய முழுவிவரத்தை வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் அத்தனையும் சட்டப்பூர்வமாக வாங்கப்பட்டவை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா தடையில்லா சான்றிதழை பெற்றுத்தருவதற்காக கடந்த 2007ல் மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான புகாரில் சிபிஐ நேற்று முன்தினம் அவரை கைது செய்தது. கைது நடவடிக்கை எனது தந்தையை குறிவைத்து நடத்தப்பட்டதல்ல. காங்கிரஸ் கட்சியை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு கணக்கில் வராத சொத்துக்கள் இருப்பதாக சில தொலைக்காட்சிகளில் தகவல்கள் வெளியானது. இதற்கு கார்த்தி சிதம்பரம் மறுப்பு தெரிவித்து அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

Tags : Former Union Finance Minister, P Chidambaram, Supreme Court, INX Scandal, CBI, Enforcement Department, Kapil Sibal, Bail, Bail, Karthi Chidambaram
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்